Telegram Group Search
Media is too big
VIEW IN TELEGRAM
கஷ்டப்படுறீங்களா இனி தாங்க முடியாது என்ற stage ku போய்டீங்களா

@aarudhaltv
சங்கீதம் 121:2

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

@aarudhaltv
யாக்கோபு 5:16

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

@aarudhaltv
சகரியா 9:12

நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

@aarudhaltv
உபாகமம் 28:12

ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

@aarudhaltv
எதையோ வேண்டி
என்னை தேடுபவர்களைத்தான்
தினம் தினம் காண்கிறேன்..

என்னை வேண்டி
என்னைத் தேடுபவர்களைக் கண்டு
எவ்வளவு காலமாகிறது?



@aarudhaltv
உபாகமம் 28:11

உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.

@aarudhaltv
1 கொரிந்தியர் 6:12

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

@aarudhaltv
ஆதியாகமம் 12:2

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

@aarudhaltv
சங்கீதம் 122:1

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

@aarudhaltv
நீ
எழும்பிக்
காரியத்தை
நடப்பி;
கர்த்தர்
உன்னோடே
இருப்பாராக.

- 1 நாளாகாமம் 22:16 -

@aarudhaltv
பாவம் செய்ய
மனிதனுக்கு கற்றுக்கொடுக்க
வேண்டியதில்லை.

மீன் குஞ்சுக்கு
நீந்த கற்றுக்கொடுக்க
வேண்டுமா என்ன?

அப்போது
உலகின் மொத்த மக்கள் தொகையே
நாலு பேர்தான்.

ஆனால்
அப்போதே ஒரு கொலை
நிகழ்ந்துவிட்டது.

ஆதாம் ஏவாள் பெற்றோர்
காயீன், ஆபேல் பிள்ளைகள்.

இந்த சின்னஞ்சிறிய
முதல் குடும்பத்தில்தான்
முதல் பொறாமையும்
முதல் கொலையும்
தோன்றின.

காயீன் மூத்தவன்
ஆபேல் இளையவன்

அண்ணன்
விவசாயி

தம்பி
மேய்ப்பன்.

ஆபேல்
தேவனுக்கு பயந்தவன்
நன்னம்பிக்கையாளன்.

ஆகவே அவன்
ஆகச் சிறந்த ஆட்டுக்குட்டியை
காணிக்கை செலுத்தினான்.

காயீன்
தேவ பயமற்றவன்
தன்னம்பிக்கையாளன்.

ஆகவே
நிலத்தின் கனிகளை
காணிக்கை செலுத்தினான்.

ஆதாமுக்காக
அவன் நிர்வாணத்தை மறைக்க
ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து
அதன் தோலினால் ஆடை நெய்து
உடுத்துவித்து
அழகு பார்த்தார் தேவன்.

இரத்தம் சிந்துதல் இல்லாமல்
பாவ மன்னிப்பு இல்லை என்பது
தேவ சட்டம்.

கிறிஸ்துவின் சிலுவை பலிக்கு
முன்னடையாளமாக
இச்சட்டத்தை உருவாக்கியது பரலோகம்.

தன் அப்பாவிடமிருந்து இந்த பாடங்களை
கற்றறிந்து அதை
தன் மனதில் வைத்திருந்த
ஆபேல்
தேவ சித்தப்படி
பரலோக திட்டப்படி
உன்னதமான காணிக்கையை
செலுத்தினான்.

தன் சுய சித்தப்படி
தன் சுய திட்டத்தின் படி
காணிக்கை செலுத்தினான்
காயீன்.

ஆகவே தேவன்
ஆபேலின் காணிக்கையை
அங்கீகரித்தார்

காயீனின் காணிக்கையை
நிராகரித்தார்.

பொறாமைத் தீ
மூண்டது
காயீனின் உள்ளத்தில்.

அத்தீயின் ஜூவாலை
ஆபேலை சுட்டெரித்தது.

இரத்தத்திற்கு
பேசும் வல்லமை உண்டு.

ஆபேலின் இரத்தம்
பழிவாங்குவதற்காக பேசியது.

கிறிஸ்துவின் இரத்தம்
பரிந்துபேசுவதற்காக பேசுகிறது.

உலகில்
முதலில் மரித்தவனும்
முதலில் கொலையுண்டவனுமான
ஆபேல்தான்

முதன்முதலில்
தேவனுக்கென்று
பிரியமான காணிக்கை
செலுத்தின பரிசுத்தவான் ஆனான்.

ஆபேல் தனக்காக
காணிக்கை செலுத்தினான்

கிறிஸ்து தன்னையே
காணிக்கையாக செலுத்தினார்.

எனவே

ஆபேலின் காணிக்கையை காட்டிலும்

உன்னத காணிக்கையை செலுத்தின 'கிறிஸ்து'
'உலக இரட்சகர்' ஆனார்!



- Bro. Durai Daniel

@aarudhaltv
2024/04/27 07:54:34
Back to Top
HTML Embed Code: